கைசிக புராண நாடகம்
கைசிக புராணம் என்பது துவாதசி நாளின் மகிமையை சொல்லக்கூடியது ஆகும். கைசிகம் என்பது ஒருவகைப் பண். இதை வராக அவதாரத்தில் பூமாதேவிக்கு வராகப் பெருமாள் அருளியதாக தொன்ம வராலாறுகள் கூறுகின்றன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள திருக்குறுங்குடி திருவடிவழகிய நம்பித் திருக்கோயிலில் நம்பிபெருமாள் மீது பக்திகொண்ட பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவார் என்ற பக்தரின் இறைப்பற்றைக் கூறுவதுதான் இந்தக் கைசிக புராணம். [1][2]
இந்த கைசிக புராணத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள் போன்றோர் நாடக வடிவில் இயற்றி நடித்து வந்தனர். காலமாற்றத்தில் இந்த நாடகம் அழிந்துவிட்ட நிலையில், டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்த நாட்டிய வல்லுநரான அனிதா ரத்னத்தின் முயற்சியால் மறைந்த பேராசிரியர் ராமானுஜம் ஏற்பாட்டில் புத்துருவாக்கம் செய்யப்பட்டது. இதன்பிறகு திருக்குறுங்குடி அழகிய நம்பித் திருக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச வளர்பிறை கைசிக ஏகாதசி முடிந்த துவாதசி நாளில் 18 ஆண்டுகளாக இந்த இந்த நாட்டிய நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ கைசிக ஏகாதசியின் மகிமை
- ↑ அனைத்து தோசங்களைப் போக்கி மோட்சம் தரும் கைசிக ஏகாதசி விரதம்!
- ↑ எஸ்.கோபாலகிருஷ்ணன் (15 நவம்பர் 2018). "திருவாரூரில் கைசிக புராணம்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2018.